மண்டபம், மார்ச் 1: மண்டபம் அருகே நாட்டு மாடுகள் பராமரிப்பு மற்றும் பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தகோன் வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரியமான் கடற்கரை அருகே அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி பீடம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நிர்வாகிகள், குருக்கள் சார்பில் கோகுலம் செயல்பாடு போபல்ஸ் நாட்டு பசு மாடுகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை கூட்டம் நடைபெற்றது.
இதில் அரியமான பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பசு மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீறு மற்றும் தயிர், பால், சாணம் கோமியம், நெய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சகவ்ய விளக்கு மற்றும் திருநீறு மற்றும் விநாயகர் ஆகியவற்றை தயாரிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சக்தி பற்றி பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட பொதுமக்களிடையே விளக்கினர்கள்.