ஜெயங்கொண்டம், அக்.20: ஜெயங்கொண்டம் ஒன்றியம் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபதேரி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை அமைப்பு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபதேரி கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தலைவராக செல்லதுரை, துணை தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக புஷ்பா, துணை செயலாளராக கீதா, பொருளாளராக செல்வகுமாரி, நிர்வாக செயற்குழு உறுப்பினர்களாக லட்சுமணன், ராஜேஷ், தீபா, கொளஞ்சி, சாந்தி, வசந்தாமணி, எழிலன் மற்றும் பலர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும், ஒட்டக்குளத்தைச் சுற்றி மதில் சுவர் கட்ட வேண்டும். பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை புதுப்பிக்க வேண்டும், மண்டபத்தேரி கடைசி எல்லையில் உள்ளதால் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 100 பேர் சேர்க்கப்பட்டனர்.