காளையார்கோவில், ஜூலை 30: காளையார்கோவில் பஸ் நிலையம் எதிரே மணிப்பூர் வன்முறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மக்களமைப்பு சார்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக பெண்கள் கூட்டமைப்பு முன்னாள் தலைவி மிக்கேலம்மாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிவகங்கை மாவட்ட மக்களமைப்பு தலைவி கவிதா மேரி தலைமை தாங்கி உரையாற்றினர். மேலும் இளையான்குடி ஒன்றிய செயலர் ஜெயந்தி, மணிப்பூர் வன்முறை சம்பவங்களை பற்றி எடுத்துரைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் பெண்களை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.