குளச்சல்,அக்.20: மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் குமார் (26). கோயம்புத்தூர் மாநகர ஆயுத படையில் போலீஸ்காரராக உள்ளார். கடந்த 16 ம் தேதி வாரண்ட் அலுவல் விசயமாக ஊருக்கு வந்தார். அப்போது நண்பரின் பைக்கை எடுத்துக்கொண்டு திருநயினார்க்குறிச்சி – இரணியல் சாலையில் குமார் சென்று கொண்டிருந்தார். கல்படி அருகே செல்லும்போது அவர் ஓட்டிச்சென்ற பைக் திடீரென நிலை தடுமாறி கீழே சாய்ந்து விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.