குளச்சல், ஜூலை 4: மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (42). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று சாந்தப்பன் வேலை முடித்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவூரில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாந்தப்பன் ஒட்டிய பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாந்தப்பனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தப்பன் அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார், காரில் வந்த நாகர்கோவில் பழவிளையை சேர்ந்த மோகன் (57) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம்
0