குளச்சல்,ஆக.30: மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அனீஸ் (23). முட்டம் தனியார் மீன் பிடித்துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி மாலை வேலை முடிந்து அனீஸ் வீடு திரும்பினார் . அப்போது தனது பைக்கை வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் காம்பவுண்டுக்குள் புகுந்து பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அனீஸ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பரப்பற்றை சேர்ந்த ஆனந்த் (24), தூத்துக்குடி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த வினோத் ராஜ் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து பைக்கையும் மீட்டனர்.