தொண்டி: தொண்டி அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஒடியதால் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தொண்டி அருகே சோழியக்குடி கண்மாய் ஓடைப்குதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியில்லாமல் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து திருவாடானை துணை வட்டாச்சியர் ராமமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொண்டி போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து முகிழ்த்தகத்தை சேர்ந்த முரளி (33), கொட்டகுடி நிஷாந்த்(24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.