விருத்தாசலம், அக். 25: விருத்தாசலம் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார், மணிமுத்தாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவரை பிடிக்க முயன்ற போது, மாட்டு வண்டியை அங்கே விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்து விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மாட்டு வண்டியின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.