சங்கராபுரம், செப். 20: சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு மணி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவர் போலீசை கண்டவுடன் தப்பித்துச் சென்றனர். போலீசார் விசாரணையில் அவர் புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் மணிகண்டன் (35) என தெரிய வந்தது. அங்கு இருந்த டிப்பர் டிராக்டர் மற்றும் அரை யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.