சென்னை, பிப்.16: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தமிழகத்திற்கு மணல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, திருப்பதியைச் சேர்ந்த ஜானி, சித்தூரைச் சேர்ந்த ஜெய்சங்கர், ஆந்திர மாநிலம்பாலகுண்டா பகுதியைச் சேர்ந்த ரோசய்யா (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய ஆந்திர லாரிகள் அதிரடி பறிமுதல்
0