திருச்சி, பிப்.12: திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடுகின்றனர். திருச்சி கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் மணல் கடத்துவதாக ரங்கம் போலீசாருக்கு கடந்த 10ம் தேதி தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவானைக்காவல் தாகூர் தெரு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற வாலிபரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.
மணல் கடத்தியவர் கைது
0