கரூர்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மணல் குவாரி இயங்கவில்லை. அதனால் மணல் கிடைக்காமல் இந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்வாதாரமின்றி கடும் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கரூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் வந்தனர்.