அறந்தாங்கி,செப்.4: மணமேல்குடி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. மணமேல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹைடெக் லேப் மையங்களில் செயல்திறன் வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணியம் வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் டக்ஸ் தட்டச்சு, சுவரொட்டி உருவாக்கம், இம்ப்ரெஸ், தமிழ் தட்டச்சு, கூகுள் இயக்ககம், ஹைடெக் லேப் செயற்கை நுண்ணறிவு மற்றும் மணற்கேணி போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் ஜெயபால் சசிகுமார், அய்யனார், வீரச்செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.