திருச்சி, ஜூன் 26: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையம் மணப்பாறை வையம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. எனவே 2025-26ம் ஆண்டிற்கான பயிற்சியாளா் சோ்க்கை ஜூன் 19 முதல் நேரடிச் சோ்க்கையாக நடைபெற்று வருகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-வது மற்றும் 8-வது தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தொழிற்பிரிவில் சோ்வதற்கு அசல் சான்றிதழ்கள் (மாற்றுச் சான்றிதழ், 10-வது மற்றும் 8-வது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார்அட்டை)-உடன் நோில் சென்று சோ்ந்து பயடையலாம். தொழிற்பிரிவு:1. Architectural draughtsman., 2.Opearter advanced machine tools, 10th pass, 3.Technician electronics system design – கல்வித்தகுதி (10th pass).4. Welder-8th pass பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடா்பான விவரங்களு க்கு 80729 65487, 94436 44967 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்ற தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தொிவித்துள்ளார்.