உடன்குடி, பிப். 18: கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் ரூ.10,000 வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. இந்த விருதினை பெற மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு 10ம் வகுப்பு மாணவி பவுசிகா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு பள்ளி ஆண்டாய்வு அன்று நடந்த சிறப்பு பள்ளி பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவியை பள்ளி தாளாளர் வில்சன்அடிகளார், தலைமை ஆசிரியர், அருள்பர்னாந்து மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
மணப்பாடு மாணவிக்கு காமராஜர் விருது
0