கந்தர்வகோட்டை, மே 29: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டாங்கால் காளியம்மன் கோயில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டாங்கால் காளியம்மன் கோயில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. உற்சவ மூர்த்தி வீதியுலா நடைபெற்றபோது, மக்கள் நேர்ந்துவிட்ட நூற்றுகணக்கன ஆடுகளை வெட்டி வழிபாடு செய்தனர். கிடாவெட்டிய பக்தர்கள் அவரவர் உற்றார்- உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து கறி விருந்து நடத்தினர். ஆலயத்தில் உள்ள மூலவருக்கு புது சேலை உடுத்தி வண்ண பூ மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆலய திடலில் பலாகார கடைகள், பெண்களுக்கு தேவையான பேன்ஸி பொருள்கள், தேங்காய் பழகடைகள், சர்பத் கடைகள் அமைந்து இருந்தனர். கோயிலில் மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வீரடிபட்டி, மோகனூர், பெரியகோட்டை, கந்தர்வகோட்டை, காட்டு நாவல், துலுக்கன்பட்டி, சுந்தம்பட்டி மற்றும் பல ஊர் மக்கள் கூடி இறைவழிபாடு செய்தனர்.
மட்டாங்கால் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
0