செய்முறை:மட்டனை மீடியமான அளவுத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிக்கவும். வெங்காயம், கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். மட்டனை 4 ஸ்பூன் நெய் விட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்து வைக்கவும். மிக்ஸியில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, காஷ்மீரி சில்லி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு பொடித்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த மசாலா சேர்த்து சுருள வதக்கவும்.வதங்கியதும் சிவந்து இருக்கும். பிறகு தயிரைக் கரைத்துச் சேர்த்து, மட்டனை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டவும். நன்கு பிரட்டிவிட்டு மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்துக் கிளறவும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.மட்டன் நன்றாக வெந்துவிடும். தண்ணீர் இருந்தால் ஓரளவு வற்றும் வரை வைத்திருந்து இறக்கவும். அவ்வளவுதான்…!சப்பாத்தி, நாண் போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். செம டேஸ்டாய் இருக்கும்.