எப்படிச் செய்வது?மட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இஞ்சி, பூண்டையும் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். மற்றொரு சட்டியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் விட்டு தாளிக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு கலவையை, பச்சைத்தன்மை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மீண்டும் நன்கு வதக்க வேண்டும். பின்பு அரைத்த மிளகாய், சீரக கலவையை சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த இறைச்சியை, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு போட்டு, பதம் பார்த்து இறக்கி விட்டு, நறுக்கிய கொத்தமல்லியை தூவ வேண்டும். அவ்வளவுதான்… மட்டன் மசாலா கிரேவி ரெடி.
மட்டன் மசாலா குழம்பு
68
previous post