திருத்துறைப்பூண்டி, ஜூலை 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் 43 ம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஊர்வலம் வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது .இந்த ஊர்வலத்தின் போது பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.