பாலக்காடு, ஆக.13: பாலக்காடு நகராட்சி உட்பட்ட காராளர் தெருவில் அமைந்துள்ள காராளர் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத விஷேச பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பாலக்காடு கொப்பம் பகுதியில் அமைந்துள்ள காராளர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுந்தோறும் ஆடிமாத விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டும் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆக. 11ம் தேதி யானைகள் தினத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், கஜ பூஜை, யானைகளுக்கு உணவு ஊட்டுதல் நிகழ்ச்சி மற்றும் பக்தர்களுக்கு ஆடி மாத கூழ் கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.