சிங்கம்புணரி, ஜூலை 1: சிங்கம்புணரி அருகே ஏரியூரில் மலை மருந்தீஸ்வரர் முனிநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து வீரர்கள் காளைகளை லாவகமாக பிடித்தனர். மஞ்சுவிரட்டில் 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியை காண உள்ளூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர்.