சிங்கம்புணரி, மே 21: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வா.கட்டையன்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விஏஓ சிவா, உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவரசன், வெள்ளைச்சாமி, நாச்சான், பழனிச்சாமி, கணேசன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.