தேனி, ஆக. 13: மஞ்சளாறு கிராமத்தில் நாளை 14ம் தேதி கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு கிராமத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்க உள்ளது.
இம்முகாமில் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதரத் துறைகள் சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.