ஒட்டன்சத்திரம், பிப். 22: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் பண்ணைப்பட்டியில் மீண்டும் மஞ்சப்பை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்ற மாணவிகள், நெகிழிகளை சேகரித்து அதற்கு மாற்றாக பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர். மேலும் நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினர்.