சூளகிரி: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்கள் மஞ்சப்பையை கையில் ஏந்தி, விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி, பேரணியாக ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் சென்றனர். இதில் பள்ளி உதவி தலைமை ராமசந்திரன், ஒருகிணைப்பாளர் வெங்கடேஷ், ஆசிரியர்கள், பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், துணை தலைவர் ஷானு, பொருளாளர் அஷ்பர், பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகர், சேகர், ஜெபஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் ஓசூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.
மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு பேரணி
previous post