கோவை, ஆக. 20: கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கே விபச்சாரம் நடந்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கே சென்று சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த சித்ரா (24), நேபாளத்தை சேர்ந்த பிரேம் குமார் (28), நரேஷ் மல்லா (42), நாகலாந்தை சேர்ந்த விடோலி (40), மணிப்பூரை சேர்ந்த நெங்ஜா (40), கிம்லிங் (25), அசாமை சேர்ந்த வாசி சிங்சித் (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேடன் பட்டேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.