நித்திரவிளை, மார்ச் 5: நித்திரவிளை அருகே மங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முஞ்சிறை வட்டார கல்வி அலுவலர் சஜலின் சுஜி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுரு சரிகா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் செல்வி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி லெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர் மற்றும் மங்காடு ஊராட்சி தலைவர் சுகுமாரன் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர்.
மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா
0