Sunday, June 16, 2024
Home » மங்கலம்பேட்டையில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மங்கலம்பேட்டையில் பரபரப்பு வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

by Karthik Yash

மங்கலம்பேட்டை, ஜூன் 9: பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கலம்பேட்டை புது நெசவாளர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி லட்சுமி (45). இவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் முன்புற இரும்பு கேட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் லட்சுமி வேலைக்கு சென்றார். இதனிடையே வேலைக்கு சென்றிருந்த அவரது மகன் தினேஷ் (24), மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்து முன்புற கதவை திறக்க முயன்றுள்ளார்.

ஆனால் கதவு உட்புறம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது, கதவு திறந்து கிடந்து வீட்டினுள் ஒரு அறையில் உள்ள பீரோவில் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் டிஎஸ்பி தர் தலைமையில் 2 தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் கூப்பரும் வரவழைக்கப்பட்டு, அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi