Saturday, July 13, 2024
Home » மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நல உதவிகள்

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நல உதவிகள்

by Francis

 

நாமக்கல் ஜூலை 18: நாமக்கல்லில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 452 மனுக்களை, பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தலா ரூ.6 ஆயிரம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தாட்கோ சார்பில் ரூ.3,500 மதிப்பில் ஒருவருக்கு சலவைப் பெட்டி, மேலும் ஒருவருக்கு நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.4.05 லட்சத்தை கலெக்டர் உமா வழங்கினார்.

மேலும் 2 பயனாளிகளுக்கு, முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பில் 4 பேருக்கு காதொலி கருவிகளை வழங்கினார். முன்னதாக, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

12 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi