திருப்பூர், மார்.4: மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 631 மனுக்களை பெற்றுக் கொண்டதாகவும் மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த நபரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சத்திற்கான காசோலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்லடம் வட்டம் அறிவொளி நகர் பகுதி 1 மட்டும் 2 ஆகிய திட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 544 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெரும் 9 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.