கரூர், ஆக. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை வழியாக செல்லும் வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையின் வழியாக வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தினால் செடி கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும், விஷ ஜந்துகளின் நடமாட்டமும் இதன் காரணமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் இந்த வாய்க்காலை பராமரித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி செடி கொடிகள் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.