கடத்தூர், ஆக.6: கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர் பேரூராட்சி வார்டு எண் 5,6 ஆகிய பகுதிகளில், நேற்று மக்களை தேடி மருத்துவ முகாம், வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் கேஸ்மணி வரவேற்றார்.
கடத்தூர் மருத்துவ அலுவலர் கனல்வேந்தன் முன்னிலை வகித்தார். இதில் ரத்த அழுத்தம், ரத்த மாதிரிகள் சேகரிப்பு, நீரிழிவு நோய் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர் பார்த்திபன், விக்னேஷ், செவிலியர் திவ்யா, வினோதினி உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் முகாமில் பங்கேற்றனர்.