கெங்கவல்லி, ஜூலை 6: வீரகனூர் அருகே, நாவலூர் பெரியகாடு பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில், தென்னை மற்றும் வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. நேற்று காலை கூட்டிலிருந்து வெளியேறிய விஷ வண்டுகள், அந்த வழியாக சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்தன. இதில், 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) செல்லப்பாண்டியன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று மருந்து கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, விஷ வண்டுகளை அழித்தனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
0
previous post