கடத்தூர், ஆக. 24: கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6, 7 மற்றும் 15 ஆகிய வார்டுகளில், நேற்று மக்களைத் ேதடி மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார். இதில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த மாதிரிகள், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் பார்த்திபன், விக்னேஷ், செவிலியர்கள் சுசிலா, திவ்யா, வினோதினி மற்றும் கடத்தூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவ முகாம்
previous post