ஒட்டன்சத்திரம், ஆக.6: ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கள்ளிமந்தையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் 4ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் தங்கம், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காவ்யா, சுகாதார ஆய்வாளர் அப்துல்லா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்ட செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவம் 4ம் ஆண்டு துவக்க விழா
previous post