திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தார். கீழச்சிவல்பட்டி, விராமதி, ஆவிணிப்பட்டி, தெற்கு மற்றும் வடக்கு இளையாத்தங்குடி, குமாரப்பேட்டை, சேவிணிப்பட்டி, ஆத்திரம்பட்டி உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், வருவாய்த்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை, காவல்துறை உள்ளிட்ட 14 துறை சார்ந்த அலுவலர்களிடம் சுமார் 840 மனுக்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆராயி, தையல்நாயகி, கவிதா, சத்தியவாணி, நல்லக்குமார், சேவற்கொடியோன், சத்யா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ரமேஷ், திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வகுமார், எஸ்.எம்.பழனியப்பன், திமுக ஒன்றியச் செயலாளர் விராமதி மாணிக்கம், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.