Monday, April 22, 2024
Home » மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 5,596 பேருக்கு ரூ.9.36 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 5,596 பேருக்கு ரூ.9.36 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

by Ranjith

 

விருதுநகர், பிப்.17: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் எம்எல்ஏ ரகுராமன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 5,596 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகள் ஆகியவற்றில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் கடந்த டிச.20 முதல் 30 வரை நடைபெற்றது. இம்முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.6.67 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.4.28 லட்சம், கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் ரூ.8.08 லட்சம், எரிசக்தி துறை மூலம் ரூ.2.90 லட்சம், வீட்டுவசதி துறை சார்பில் ரூ.21 லட்சம், குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை மூலம் ரூ.4.33 கோடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ரூ.4.47 கோடி, மகளிர் துறை மூலம் ரூ.3.92 லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.10 லட்சம் உள்பட மொத்தம் 5,596 பயனாளிகளுக்கு ரூ.9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் அனிதா, வருவாய் கோட்டாட்சியர்கள், நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

20 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi