Thursday, February 22, 2024
Home » மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கி கடன் பெற பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கி கடன் பெற பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

by Karthik Yash

திருவள்ளூர், ஜன. 6: திருவள்ளூர் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த இளையோரும், பொது மக்களும் புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, விலைப் பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வருகை தந்து மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மாவட்ட தொழில் மைய அரங்கில் ஆலோசனை பெற்று இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வருகின்ற 23ம் தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கி கடன் பெற பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

fourteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi