நாமகிரிப்பேட்டை, ஆக.28: நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு வசதி, வேளாண்மை துறை சார்பில் விவசாய கடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வங்கி கடன், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வங்கி கடன், தொழில் கடன், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை வேண்டிய மனுக்களை பொது மக்கள் வழங்கினர். இம்முகாமில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, தாசில்தார் சரவணன், வட்டார அட்மா திட்ட குழு தலைவர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திர பூபதி, சரவணன், லோகநாயகி, தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் இளையப்பன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி லட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா சரவணன், செக்கடி ஆறுமுகம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
previous post