தேவகோட்டை, ஆக.20: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியால் ஊராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியிலும், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உஞ்சனை ஊராட்சியிலும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
புளியால் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், தேவகோட்டை வட்டாட்சியர் சேதுநம்பு உள்பட அரசு அலுவலர்களும், தலைமையாசிரியர், ஆசியர்கள், மாணவர்கள், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உஞ்சனை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமில், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரவணமெய்யப்பன், உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி, வெங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.