சேந்தமங்கலம், ஆக.19: எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பெருமாபட்டி, கொடிக்கால்புதூர், பொம்மசமுத்திரம், ரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு நாமக்கல் ஆர்டிஓ பார்த்திபன் தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகிதா, நடராஜ், தாசில்தார் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி பாலகிருஷ்ணன், சுகுணா தமிழ்ச்செல்வன், வசந்தாதேவி சங்கபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.