சேந்தமங்கலம், ஆக.17: சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பொன்னுசாமி எம்எல்ஏ வழங்கினார்.
சேந்தமங்கலம் ஒன்றியம், பச்சுடையாம்பட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பொட்டணம், அக்கியம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, பச்சுடையாம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி வரவேற்றார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், நகர திமுக செயலாளர் தனபாலன், பிடிஓ.,க்கள் ஜெயக்குமரன், தமிழரசி, தாசில்தார் சக்திவேல், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, முருகேசன், ஆனந்தபாபு, பிரபாகரன், திலகம், விமலா தேவி, வெங்கடேஸ்வரி, அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.