வருசநாடு, ஆக.15: கடமலைக்குண்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் சித்ராசுரேஷ் தலைமை வகித்தார். பாலூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார், மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிஅன்பில் சுந்தரபாரதம், மந்திச்னை மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, முத்தாலம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அய்யணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளா ண்மை துறை, மின்வாரிய துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.