வாழப்பாடி, ஆக.7: பெத்தநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னக்கல்ராயன் மலை வடக்கு நாடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் விழா நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமை வகித்து தீர்வுகண்ட மனுக்களுக்கு ஆணையை வழங்கினார். மேலும் கலைஞர் கனவு இல்ல வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு உத்தரவு ஆணையை வழங்கினார்.
இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராமன், மத்திய ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு (எ) தங்க மருதமுத்து, வடக்கு நாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தெற்கு நாடு ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், துரைசாமி, தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 550 மனுக்கள் பெறப்பட்டது. காப்பீடு திட்டத்தில் 30 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தலா ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்ட 50 நபர்களுக்கு வேலை உத்தரவு ஆணையை வழங்கப்பட்டது.