பாடாலூர், ஆக. 6: பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரகபகுதிகளில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆலத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நக்கசேலம், சிறுவயலூர், குரூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், மாவிலங்கை ஆகிய கிராம ஊராட்சி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் செட்டிகுளம் (மலையடிவாரம்) தனியார் திருமண திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. முகாமில் 15 அரசுத்துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.