திருச்சி, மே 14: 108 ஆம்புலன்ஸில் அவசர உறுதி சேவையில் காலி பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகம் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட மேலாளர் குமரன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது.108 ஆம்புலன்ஸில் அவசர உறுதி சேவையில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் 108, FHS, 1962 (அனிமல் ஆம்புலன்ஸ்) சேவை பைலட் உண்டான முதல் கட்ட நேர்முகத்தேர்வு திருச்சி, EVR சாலையில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகம் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை (மே.15)ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மருத்துவ உதவியாளருக்கு தேவையான கல்வி மற்றும் தகுதிகள், நேர்முகத் தேர்வு வருபவர்களின் வயது 19 முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் கல்வி தகுதியானது (B.Sc நர்சிங், GNM, DMLT, ANM (12ம் வகுப்பு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான B.Sc Zoology, Botany, Bio-Chemistry, Bio- Technology, Micro biology இவைகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும் இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மேலும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாதம் ஊதியமாக ரூ..16,990(மொத்தம்). ஓட்டுனருக்கான கல்வித் தகுதி பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நேர்முகத் தேர்வு வருபவரின் வயது 24 முதல் 35 வயது இருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமை பரிசோதிக்கப்படும்.
ஓட்டுனர் உரிமம் இலகுரக ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3ஆண்டுகள் மற்றும் பேட்ச் உரிமம் பெற்று ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஓட்டுனருக்கான தேர்வு செய்யப்படுபவர்கள் மாதம் ஊதியமாக ரூ.16,790{மொத்தம்), அவசர காலமருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பனிக்கு உண்டான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர், நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வித் தகுதி. ஓட்டுனர் உரிமம், முகவரி சான்று அடையாளச் சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 8925941843,8925941841 என்ற எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்