நீடாமங்கலம். பிப். 21: நீடாமங்கலம் செம்மொழி மகளிர் சுய உதவி குழுவிற்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது. தேசிய வாழ்வாதார இயக்கத்தின் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் நீடாமங்கலம் பேரூராட்சியில் தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழி மகளிர் சுய உதவி குழுவிற்கு மணிமேகலை விருது அறிவிக்கப்பட்டது. விருதினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பொன்னம்பலம். உதவி திட்ட இயக்குனர் சுரேஷ் முன்னிலையில் குழு ஊக்குனர் சுப்புலெட்சுமி, பிரதிநிதி புவனேஸ்வரி மற்றும் குழு அனைதத்து உறுப்பினர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சமுதாய ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி மற்றும் சமுதாய வளப் பயிற்றுநர் ராஜகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
மகளிர் சுய உதவி குழுவுக்கு மணிமேகலை விருது
0