திருவள்ளூர்: பட்டாபிராமில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடக்கவிருப்பதாக கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல்வேறு வகையான கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே மகளிர் சுய உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நாளை முதல் வரும் 31ம் தேதி வரை என 3 நாட்கள் பட்டாபிராமில் உள்ள தர்ம மூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துகல்லூரியில் விற்பனை மற்றும் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் இதர மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற பொருட்களுடன் நாளை காலை 8 மணிக்குள் கல்லூரி சந்தையில் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 27664528 மற்றும் 9787368726 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.