Thursday, April 18, 2024
Home » மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கி சாதனை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கி சாதனை

by Ranjith

ராமநாதபுரம், பிப்.16: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2021-2022ம் ஆண்டில் ரூ.15.98 கோடிக்கும், 2022-2023ம் ஆண்டில் ரூ.28.28 கோடிக்கும் வழங்கப்பட்ட சுய உதவிக்குழு கடன் நடப்பு நிதியாண்டில் ரூ.103.18 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் நடப்பு நிதியாண்டில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் 3000க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. அக்குழுக்களுக்கு விரைவில் கடன் வழங்கப்பட உள்ளது.

அடித்தட்டு நிலையில் வாழும் மகளிருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதால், நாள் வட்டி,மீட்டர் வட்டி கொடுமையில் இருந்து விடுபட்டு பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள கூட்டுறவு அமைப்பு வழிவகை செய்கிறது.இதுவரை மகளிர் குழுவில் உறுப்பினராக இல்லாத மகளிர் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய மகளிர் குழு அமைக்கலாம். அல்லது ஏற்கனவே செயல்படும் குழுக்களில் இணைத்து கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ளுமாறு ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi