ஊட்டி, செப்.6: நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மாபெரும் வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் விழாவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநில அளவில் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் 9ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் கலாசார மையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாபெரும் வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.